ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி எனும் பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

இந்த படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கையிலான காட்சிகள் இப்படத்தில் காட்டப்பட்டுளாது. 

படத்தின் முதல் பாடலான மழை மழை பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சைந்தவி பாடிய இந்த பாடல் வரிகளை ஜிவி பிரகாஷ் எழுதியுள்ளார். தலைவி திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளதால், படத்தின் இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. 

இந்த படத்தில் எம்.ஜி.ஆர்-ஆக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். கெட்டப் பலரை வாய் பிளக்க செய்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தாக தலைவி திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். 

உடல் பருமனை ஏற்றி குறைக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட நடிகை கங்கனா ரனாவத், கண்ணீர் சிந்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தன்னை மிகவும் மரியாதையாக இயக்குனர் விஜய் நடத்தியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.