ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் டாப்ஸி.இடையில் தமிழ் படங்களில் நடித்தாலும் அதன்பிறகு ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தப்பட் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

ஜெயம் ரவி நடிக்கும் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.இதனை தவிர இந்திய கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜின் வாழ்க்கை வலாற்று படமான Shabaash Mithu படத்தில் நடிக்கிறார்.Raees படத்தை இயக்கிய Rahul Dholakia இந்த படத்தை இயக்குகிறார்.டாப்ஸீ பிரபல டென்மார்க் பாட்மிண்டன் வீரர் Mathias Boeவை காதலிக்கிறார் என்பதை லாக்டவுனுக்கு முன் உறுதி செய்தார்.

விஜய்சேதுபதி,ராதிகா உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் டாப்ஸீ நடித்து வந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப்போனது,இதனை தொடர்ந்து லாக்டவுனுக்கு பிறகு இந்த படத்தின் மீதமிருந்த ஷூட்டிங் நிறைவுசெய்யப்பட்டது.இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு maldivesக்கு சுற்றுலா சென்றார் டாப்ஸீ.

அங்கிருந்து தனது புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து வந்தார்.இவை ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வந்தன.தற்போது தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாப்ஸீ,இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக பரவி வருகிறது.டாப்ஸீயின் செம ஜாலியான இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கின் மூலம் காணலாம்