தேர்வு நடக்கும் போதே கொடூரத்தின் உச்சமாக, கல்லூரி வளாகத்தில் 17 வயது மாணவி ஒருவர், சக மாணவர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பாலியல் பலாத்கார படுகொலையை சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால், அதற்குள் அதே மாவட்டத்தில் மீண்டும் ஒரு கூட்டுப் பாலியல் பலாத்காரம் நடைபெற்று நாட்டையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதுவும், ஒரு கல்லூரியில். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கொடூரம் சாத்தியமில்லை, உத்திரப் பிரதேசம் மாநிலத்தைத் தவிர.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஜான்சி கல்லூரியில் சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தனர். இந்த தேர்வுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இப்படி ஒரு கூட்டுப் பாலியல் பலாத்காரம் அந்த கல்லூரியின் வளாகத்தில் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, அந்த கல்லூரியின் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், ஜான்சி கல்லூரியில் சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வுகள் எழுத வந்த ஒரு பெண்ணுடன் துணைக்கு வந்து உள்ளார். அப்போது, தேர்வு எழுதும் பெண்மணி கல்லூரியின் உள்ளே தேர்வு எழுதச் சென்று விட்டார். அப்போது, அந்த 17 வயது சிறுமி மட்டும் கல்லூரியின் வெளியே நின்றிருந்து உள்ளார்.

அப்போது, அந்த கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 12 பேர் ஒன்றாக அங்கு வந்துள்ளனர். அப்போது, தனியாக நின்றிருந்த மாணவியைப் பார்த்து சபலப்பட்ட அந்த மாணவர் கும்பல், அந்த மாணவியை வலுக்கட்டாயமாகக் கல்லூரிக்குள் இழுத்துச் சென்ற, அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து 12 பேரும் மாறி மாறி வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, ஒரு மாணவன் இதனைத் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளான்.

அத்துடன், அந்த மாணவி வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு, “இந்த பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே சொன்னால், உன்னுடைய இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம்” என்று கடுமையாக மிரட்டி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த காம வெறிப்பிடத்த அந்த மாணவர் கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. ஆனால், சிறுமி மட்டும் எழவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் அங்கேயே கதறி அழுது உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, மாணவி ஒருவரின் அழுகுரல் சத்தம் கேட்டு, அந்த தேர்வு மையத்திற்குப் பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீசார் ஒருவர் அந்த இடத்திற்குச் சென்று பார்த்து உள்ளார். அப்போது, அந்த மாணவியின் ஆடைகள் முற்றிலும் கிழிந்த நிலையில், அலங்கோலமாக கிடந்த நிலையில், அவர் அழுதுகொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து, என்ன நடந்தது என்று அந்த மாணவியிடம் அந்த போலீசார் கேட்டுள்ளார். இதனையடுத்து, தனக்கு நேர்ந்த கூட்டுப்  பாலியல் பலாத்காரம் குறித்து, அவர் கூறி கதறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த போலீசார், இது குறித்து தனது காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து விட்டு, அந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். அங்கு, அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அந்த 12 கல்லூரி மாணவர்கள் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டனர். இதனையடுத்து, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 12 பேரில், 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட அந்த 17 வயது சிறுமி, யாருடன் அந்த கல்லூரிக்கு வந்தார் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கை, விரைவு நீதிமன்றம் விரைந்து விசாரிக்கவும், குற்றப்பத்திரிகையை விரைவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், காவல் துறையினருக்கு ஜான்சி மாவட்ட மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பும் வழக்கும் என்றும், அந்த கல்லூரியின் நிர்வாகம் போலீசாரிடம் உறுதி அளித்துள்ளது. இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் மிகப் பெரும் பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறது. இதனால், உத்திரப் பிரதேசத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.