திருமணம் செய்து கொள்ளச் சொல்லி 16 வயது சிறுமியை காதல் டார்ச்சர் கொடுத்ததால், கடுப்பான காதலன் சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்து உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர், சென்னை தாம்பரம் அடுத்து உள்ள சேலையூர் பாரதி நகரில் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்து வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்து உள்ளார்.

அப்போது, சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் கோவிந்தனின் மகள் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்து உள்ளனர். அப்போது, பெரும்பாலான காதலர்களுக்குள் வருவது போல் இந்த காதலர்களிடமும் அவ்வப்போது சண்டை வந்து உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுமியும் அவரது குடும்பத்தினரும் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தொட்டியில் கிராமத்தில் நடைபெறும் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காகக் கலந்துகொள்ள வருகை தந்து உள்ளனர்.

இந்த தகவலைத் தெரிந்துகொண்ட காதலன் சதீஷ், சென்னையில் இருந்தே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சிறுமியைத் தேடி தொட்டியம் கிராமத்திற்கு வந்துள்ளான்.

அப்போது, சிறுமியின் உறவினர் வீட்டின் அருகே வந்து விட்டு நின்றுவிட்டு, சிறுமியை வீட்டை விட்டு வெளியே வரும்படி கூறியிருக்கிறான். சிறுமியும் தனது உறவினர் வீட்டிலிருந்து வெளியே வந்து இருக்கிறார்.

அப்போது, தன்னுடைய இருசக்கர வானத்திலேயே சிறுமியை அமர வைத்து, அங்கிருந்து சுண்ணாம்பு ஓடை என்னும் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

அங்கு, தனிமையில் காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இருவருக்குள்ளும் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அப்போது, கடும் ஆத்திரமடைந்த காதலன் சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், சிறுமி அலறி துடித்து சத்தம் போடவே, கழுத்தை பாதி அறுத்த நிலையில், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

ஆனால், கழுத்து அறுப்பட்ட அந்த சிறுமி, ரத்த வெள்ளத்தில் அந்த பகுதியின் சாலையோரம் அப்படியே மயங்கி சரிந்து விழுந்துள்ளார். அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள் சிறுமியை ஓடி வந்து தூக்கி உள்ளனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற போலீசாரும், சிறுமியை தூக்கி அருகில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பிச் சென்ற காதலன் சதீஷ், நாமக்கல்லில் இருக்கும் தனது சகோதரி வீட்டிற்குச் செல்லும் நோக்கத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்க, போலீசார் நடமாட்டம் இருப்பதைப் பார்த்த அவர், சேலம் உடையாப்பட்டி வைபாஸ் அருகில் உள்ள பெருமாள் கோயில் மேடு பகுதியில் உள்ள கரட்டில் நேற்று இரவு பதுங்கி இருந்து உள்ளார்.

அத்துடன், இரவு நேரத்தில் அங்குப் பதுங்கி இருந்து போது பயம் அவரை வாட்டி உள்ளது. மேலும், போலீசாரிடம் சிக்கிக்கொண்டால் நம்முடைய நிலைமை அவ்வளவு தான் என்று யோசித்த காதலன் சதீஷ், அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளான்.

இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், சதீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “என்னை உடனே திருமணம் செய்துகொள் என்று, அந்த 16 வயது சி0.றுமி தனது காதலன் சதீஷை தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த காதலன் சதீஷ், சிறுமியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயன்று, தானும் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, காதலன் சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று உள்ளதாகவும், இது தொடர்பாக சிறுமியின் தந்தைக்கு எல்லா விசயங்களும் தெரிந்து பெரிய பிரச்சனை ஆன நிலையில், “இனிமேல் சிறுமியைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று காதலன் சதீஷ் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும்” சிறுமியின் தந்தை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.