கொடைக்கானலில் காதல் ஆசை காட்டி 10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பகல் நேரத்தில் வேலைக்குச் சென்ற பிறகு, அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக, சிறுமி வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் போது, அந்த வழியாக இருக்கம் தேநீர் கடையில் வேலை பார்க்கும் அஸ்கர் அலி என்ற இளைஞர், அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்துள்ளான். இப்படியான காதல் தொல்லையால், அது உண்மை என நம்பிய அந்த சிறுமி, அந்த இளைஞன் மீது காதல் வயப்பட்டு உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியும், அந்த இளைஞனும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி மட்டும் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது, அங்கு வந்த காதலன் அஸ்கர் அலி சிறுமியிடம் ஆசை ஆசையான வார்த்தைகளைப் பேசி, சிறுமியுடன் பல முறை தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இப்படி அடிக்கடி அந்த உல்லாச இன்பம் அரங்கேறியதால், அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்து உள்ளார். 

சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர், அவரிடம் தனியாக விசாரித்து உள்ளனர். அப்போது, தன் காதல் விசயம் பற்றியும், காதலன் தன்னை ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி தனிமையில் இருந்ததையும் சிறுமி கூறியிருக்கிறார். அத்துடன், “நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்றும், சிறுமி கூறியிருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் காதலன் அஸ்கர் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், அறந்தாங்கி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரஹாரா வீதியில் உள்ள தமிழ்நாடு மளிகைக் கடையின் உரிமையாளர் 52 வயதான முகமது ராவுத்தர் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், 52 வயதான முகமது ராவுத்தரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமது ராவுத்தரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.