தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகளுக்கு நீர் வர தென்மேற்கு பருவமழைதான் காரணமாக உள்ளது, மேலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கும் தென்மேற்கு பருவமழை நல்ல மழைப் பொழிவைத்தரும். இருப்பினும் தமிழ்நாடு முழுமைக்கும் மழை தருவது வடகிழக்கு பருவமழைதான். ஏரி, குளங்கள் நிறைய, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வடகிழக்கு பருவமழையே முக்கிய காரணம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் பருவமழை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன். “பசிபிக் கடல் பகுதியில் லா நினோ நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. இதனால் தென்மேற்கு பருவகால நிலை தொடர்கிறது. இதையடுத்து வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தென்னிந்திய கடற்பரப்பை கடந்து செல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது. வரும் அக்டோபர் 22ஆம் தேதி வரை மேற்கு காற்று வீசும், பின்னர் வரும் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும்” என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், துணை முதல்வர், காவல் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

அந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

``தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன. புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய, மாநில பேரிடர் மீட்டுக்குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. 

தென்னிந்திய பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடர்வதாகவும், வடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், பருவமழை காலங்களில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இதனிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் 2-வது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை அணைக்கு வினாடிக்கு 26,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 99.11 அடியை தாண்டியுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்"

இவ்வாறு அவர் கூறினார்.