தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான திரு கே பாக்யராஜ் அவர்களின் மகன் ஆவார். தமிழில் சக்கரகட்டி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் சாந்தனு. சக்கரக்கட்டி திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைத்து இருந்தார். திரைப்படத்தில் இடம்பெற்ற டாக்ஸி டாக்ஸி பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. 

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள சாந்தனும் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். முன்னதாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான பாவ கதைகள் ஆன்தாலஜி படத்தில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த தங்கம் எபிசோட்டில் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

 தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்”  திரைப்படத்தின் “ஏதோ சொல்ல”பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . இயக்குனர் ஸ்ரீதர்  இயக்கும் இத்திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் திரு ரவீந்திரன் தயாரிக்கிறார் இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைக்க சாந்தனு உடன் இணைந்து நடிகை அதுல்யா இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

சில நாட்களுக்கு முன்பு “ஏதோ சொல்ல” என ஆரம்பிக்கும் இப்பாடலை பிரபல பாடகர் ஸ்ரீராம் பாடிய  இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலின் வீடியோ இப்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.