தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தினசரி கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்த நிலையில் பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

 

மருத்துவர்களும் அரசாங்கமும் மக்களை தடுப்பூசி பயன்படுத்த சொல்லி அறிவுறுத்தும் நிலையில் மக்களுக்கு சிறிது அச்சமும் குழப்பமும்  தடுப்பூசியின் மீது ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம், தடுப்பூசிகளில் எந்தவிதமான பயமும் இல்லை தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள இப்போது இருக்கிற ஒரே வழி என்று கூறி அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது. 

actor jeeva took the corona vaccine

இதில் ஒரு பகுதியாக நிறைய சினிமா பிரபலங்களும் தடுப்பு ஊசியை எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகர் ஜீவா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அனைவரும் குறவன் ஒரு தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.