தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின்  மகள் நடிகை கீர்த்தி பாண்டியன்,அருண்பாண்டியனின் உடல்நிலையை குறித்து  ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  இந்த மாதத்தில் ஒருநாள் இரவு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு தூங்க அவதிப்பட்டுள்ளார் நடிகர் அருண்பாண்டியன். இதையடுத்து அவரை அவசரமாக அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு  பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதையடுத்து திருநெல்வேலியிலுள்ள வீட்டில் அவரை தனிமைப்படுத்துதலில் ஏழு நாட்கள் முழு மருத்துவ உதவிகளோடு பார்த்துக்கொண்டனர். நடிகர் அருண் பாண்டியனுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இதையடுத்து 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் அவருக்கு தோற்று இல்லை என்பது தெரியவந்தது. பிறகு  மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்து  அவருக்கு முழு இருதய பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் இதயத்தில்  சில அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது. அதனால் உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த உடனே அடுத்ததாக இதயத்தில் ஏற்பட்டுள்ள இந்த அடைப்புகளை சரி செய்ய சிகிச்சை மேற்கொள்வதில் குடும்பத்தில் பயமும் குழப்பமும் ஏற்பட்டது. 

ஆனால் அருண்பாண்டியன் நல்ல உடல் நலத்துடன் இருந்ததால் உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட்  சிகிச்சை செய்யப்பட்டது. மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்தும்  இருதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பில் இருந்தும் குணமாகி அருண்பாண்டியன் மீண்டு வந்திருப்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார் 

“சூப்பர் ஹீரோவாக இருக்கும் எனது அப்பா இப்போது நலமுடன் இருக்கிறார் விரைவில் பூரண குணம்  அடைவார்” 

என்றும் தெரிவித்துள்ளார் கடந்த ஒரு மாத காலம் எங்களுக்கு மிகவும் பரபரப்பான காலமாகவே இருந்திருக்கிறது  எனத் தெரிவித்துள்ள கீர்த்தி பாண்டியன் பொதுமக்களையும் பாதுகாப்பாக இருக்கும் படியும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.