மிகவும் விநோதமான முறையில் ஆணுக்கு மணப்பெண் தாலி கட்டிய சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த உலகத்தில் நடைபெறும் பல திருமண நிகழ்வுகள் மிகவும் விசித்திரமாக நடைபெறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதே நேரத்தில், சம கால டிஜிட்டல் உலகில் ஆண் - பெண் சமத்துவத்தையும் பலரும் வலியுறுத்தி வருவதையும் நாம் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், வித்தியாசமாக நடைபெறும் இது போன்ற பல சம்பவங்கள், சமூகத்தில் பேசும் பொருளாக மாறிவிடுவதும் உண்டு. 

அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற ஒரு விநோதமான திருமணம் ஒன்று, தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

அதாவது, மும்பையைச் சேர்ந்த தனுஜா என்ற இளம் பெண்ணும், ஷார்துல் என்ற இளைஞரும் ஒருவரை ஒருவரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் வாழ்க்கை 4 ஆண்டுகளை கடந்திருக்கிறது.

இதனால், காதலர்கள் இருவரும் தங்களது காதலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்பி, திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

அந்த நேரத்தில், காதலி தனுஜாவிற்கு ஒரு புது யோசனை ஒன்று தோன்றி உள்ளது.

அதாவது, “உலகம் முழுவதும் காலம் காலமாகத் திருமண சடங்குகள் என்பது, ஆணாதிக்கத்தைக் குறிக்கும் வகையிலே அமைந்து உள்ளது என்றும், அதேயே ஏன் நாமும் பின் தொடர வேண்டும் என்றும், காதலி தனுஜா யோசித்திருக்கிறார்.

அத்துடன், “நம்முடைய திருமணத்தில் அப்படி நடக்கக் கூடாது என்றும், தன்னுடைய இந்த முடிவைத் தனது காதலனிடம்” அந்த காதலி தனுஜா கூறியிருக்கிறார். 

அப்படியாக, “திருமணம் நடைபெறும் போது, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொள்வோம்” என்று, காதலி தனுஜா இரு வீட்டார் பெற்றோர் முன்பும் கூறியிருக்கிறார். அதாவது “மணப்பெண், கணவனாக வரப்போகும் ஷார்துலுக்கு தாலி அணிவிப்பேன்” என்று, கூறியிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த இரு வீட்டார் பெற்றோர் என்ன செய்வது என்று அப்படியே திகைத்துப் போய் நின்று உள்ளனர். அத்துடன், மணமகனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனாலும், தனது முடிவில் அந்த மணப்பெண்ணும் சரி, அந்த மணமகனும் சரி கடைசி வரை உறுதியாக இருந்து உள்ளனர். 

இதனால், திருமணத்தில் கணவன் ஷார்துலுக்கு, மனைவியான தனுஜா, தங்கத்தால் ஆன தாலியை அவரது கழுத்தில் அணிவித்து உள்ளார். இதனைக் காதல் கணவன் ஷார்துல், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு உள்ளார். 

குறிப்பாக, “திருமண நாளன்று மட்டுமல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் மனைவி கட்டிய இந்த தாலியுடன் நான் இருக்கப் போகிறேன்” என்று, கணவன் கூறியுள்ளது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இந்த வித்தியாசமான தம்பதியரின் புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.