திரை ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது ZEE5 தமிழ். அந்த வகையில், சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள வெப் சீரிஸ் முகிலன். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட முகிலன் வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது. 

பல திருப்பங்கள் கொண்ட திரைக்கதையால் மெருகூட்டப்பட்ட முகிலன் வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது. இந்த வெப்சீரிஸில் ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். தினேஷ் ரமணா (இன்சடியஸ் மீடியா), பால சுந்தரம் (இன்சிடியஸ் மீடியா), ஜெயச்சந்திரன் (இன்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் தயாரித்துள்ளனர்

பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிமோழியன் ராமதுரை கலை பணிகள் மேற்கொள்கிறார். அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் இந்த வெப்சீரிஸை காண ஆவலாக உள்ளனர் திரை விரும்பிகள். முகிலன் வெப்சீரிஸின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ஈர்த்தது. இதனைத்தொடர்ந்து தற்போது முகிலன் ட்ரைலர் வெளியானது. 

1970-களில் கதை நகர்வதால், அந்த காலத்திற்கு ஏற்றார் போல் காட்சிகளை செதுக்கியுள்ளனர் படக்குழுவினர். ஒரு சிலருக்கு சுப்ரமணியபுரம் படத்தை பார்ப்பது போல் இருந்திருக்கலாம். மகேஸ்வரி எனும் பாத்திரத்தில் முகிலனின் காதலியாக வருகிறார் ரம்யா பாண்டியன். கேங்ஸ்டர் வாழ்வில் வரும் காதலி, கதையில் என்னென்ன திருப்பத்தை ஏற்படுத்துகிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். 

ட்ரைலரில் வரும் வசனங்களை பார்க்கையில், முதலியார் எனும் பெரிய தல இருந்த இடத்தை பிடிக்க நினைக்கிறாரா முகிலன் அல்லது முதலியாரின் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்கிறாரா என்பது வெப் சீரிஸ் பார்க்கையில் தெரியும். ஆக்ஷன் த்ரில்லர் கலந்த இந்த கதையில் வரும் திருப்பங்களுக்கு ஏற்றவாரு பின்னணி இசையை தந்துள்ளார் விஷால் சந்திரசேகர். கடைசியில் முகிலன் என்ன ஆகிறார். இந்த டானின் வாழ்க்கையை பார்த்து ரசித்திட ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். முகிலன் குழுவுக்கும், Zee5 குழுமத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது நம் கலாட்டா.