கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

கடைசியாக பிரபு தேவா நடித்த குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதையடுத்து தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டுவந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க என புலம்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள். பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருக்கிறார். சமீபத்தில் பனி மலையில் வெகேஷன் சென்று ஜாலி ஆட்டம் போட்டு குதூகலித்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

இந்நிலையில் பனிச்சறுக்கு செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்போது கீழே விழுந்தபடி, பனிக்கட்டியில் அமர்ந்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

ஹன்சிகா கைவசம் மஹா திரைப்படம் உள்ளது. எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாகும். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)