வக்கிர புத்தி காரணமாக, இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வெறிபிடித்த இளைஞன் ஒருவன், அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலம் ரேவதி பகுதியைச் சேர்ந்த நரேந்திரா என்ற இளைஞன், மது போதைக்கு அடிமையான நிலையில், வேலைக்கு எதுவும் செல்லாமல் அந்த பகுதியில் சும்மாவே ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியாக, போதைக்கு அடியான நிலையில், அவர் தனது செல்போனில் அதிகம் ஆபாசப் படங்களைப் பார்த்து பொழுதைப் போக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்ற அந்த நபர், அந்த இளம் பெண்ணை மிரட்டியும், தாக்கியும், துன்புறுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

இவற்றுடன், அந்த நபரின் வாலியல் வக்கிர புத்தி உச்சத்திற்குச் சென்றதால், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை, அந்த பெண்ணிற்கே தெரியாமல், அந்த நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார்.

இதனையடுத்து, பாலியல் வெறி தீர்ந்த பிறகு அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்து அந்த நபர் அனுப்பி வைத்து உள்ளார். இதனையடுத்து, உயிருக்கும், மானத்திற்கும் பயந்துபோன அந்த இளம் பெண், இது பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாமல், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டால் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

பெண்ணின் நடவடிக்கையில் மாற்றித்தை கண்ட பெற்றோர், அந்த பெண்ணிற்கு அடுத்த சில மாதங்களிலேயே வரன் பார்த்து, முறைப்படி திருமணம் செய்த 
வைத்து உள்ளனர். இப்படியாக, அந்த பெண்ணின் திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்றுகொண்டு இருந்தது.

இப்படியான சூழ்நிலையில், கடந்த டிசம்பரில் சம்மந்தப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் போது எடுக்கப்பட்ட குறிப்பிட்ட அந்த ஆபாசப் வீடியோவை அந்த நபர், சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவனின் கவனத்திற்கும் அந்த வீடியோ சென்று உள்ளது. 

இதனால், அந்த வீடியோவை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன், “இனி உன்னோடு என்னால் வாழ முடியாது” என்று கூறிவிட்டு, அந்த பெண்ணை அவரது கணவர் கை விட்டு சென்று விட்டார். 

இதனால், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், தனது அம்மா வீட்டிற்கு வந்து விட்டார். இந்த தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், இங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அதன் படி, தலைமறைவாக இருந்த குற்றவாளி நரேந்திராவை போலீசார் அதிரடியாகக் கைது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் தனிப்பட்ட முறையில் கவனித்ததில், அந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்த குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கும் பணிகளை போலீசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.