காதலித்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துகொண்டதால், கடுப்பான காதலி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

புதுச்சேரி மாநிலம் முத்திரப்பாளைம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அல்போன்ஸ் என்ற இளைஞர், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

அதே போல், இதே பகுதியைச் சேர்ந்த 19 இளம் பெண், அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இப்படியான சூழ்நிலையில், இந்த 19 வயது இளம் பெண்ணும், அந்த 25 வயது அல்போன்ஸ் என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், அவர்கள் இருவரும் அந்த பகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், அடிக்கடி அல்போன்ஸ் தனது காதலி வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்து உள்ளார். காதலி வீட்டில், அவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டிற்குச் செல்லும் அல்போன்ஸ், அங்கு தனியாக இருக்கும் காதலியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இப்படியான இந்த உல்லாச வாழ்க்கை வால ஆண்டுகள்கா தொடர்ந்து நடைபெற்று வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், அந்த இளம் பெண்ணுடன் பேசுவதை அல்போன்ஸ் சமீப காலமாகத் தவிர்த்து வந்துள்ளான். 

இதனால், “என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு” அல்போன்சிடம் அந்த இளம் பெண் வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்திருக்கிறார் அல்போன்ஸ். அந்த இளம் பெண் தொடர்ந்து வற்புறுத்தவே, வேறு வழியின்றி, “எனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என்றும், நானும் அவளைத் தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்” என்றும், கூறி விட்டு, அந்த இளம் பெண்ணுடன் பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டார்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம் பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இது குறித்து அங்குள்ள கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன் காதலன் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காதலன் அல்போன்சை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், அவர் தன் காதலியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியினை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.