ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியை, 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த மெச்சால் காடிகேசர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர், ஏழ்மையின் காரணமாக அங்குள்ள ஒரு மெடிக்கலில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். 

அப்போது, நேற்றைய தினம் பணியில் சற்று நேரம் ஆனதாலும், சரியான நேரத்திற்கு பேருந்தும் கிடைக்காத சூழ்நிலையில், அந்த கலலூரி மாணவி இனியும் தாமதிக்க வேண்டாம் என்று, அந்த மாணவி அங்கு வந்த ஒரு ஆட்டோவில் ஏறி சென்று உள்ளார்.

இதனையடுத்து, அந்த மாணவி ஆட்டோவில் ஏறிய சிறுது நேரத்திலேயே, அந்த மாணவி கூறிய வழி தடத்தில் செல்வது போல் பயணித்த அந்த ஆட்டோ, அதன் பிறகு அங்கிருந்து மற்றொரு வழி தடத்தில் பயணித்து, அந்த பெண் கடத்திச் செல்லப்பட்டு உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, 5 பேர் சேர்ந்து அந்த கலலூரி மாணவியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து மிகவும் கடுமையான முறையில் துன்புறுத்தி உள்ளனர்.

பாலியல் பலாத்காரத்திற்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்து அடம் பிடித்ததால், அந்த மாணவியை அந்த 5 பேரும் சேர்ந்து அடித்து மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் வெறிப்பிடித்த அந்த காட்டு மிருகங்களிடம், காம வெறி தீர்ந்தப் பிறகு, அந்த பெண்ணனை பாவம் பார்த்து விட்டு விட்டனர்.

இதனையடுத்து, அங்கிருந்து வந்த அந்த இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக அதிரடி நடவடிக்கயைில் ஈடுபட்டனர். அதன் படி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த பெண்ணை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த 4 பேரை உடனடியாக கைது செய்தனர்.

அத்துடன், இந்த வழக்கில் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்து கடத்திச் சென்ற முதல் குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநர், தற்போது வரை தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தற்போது மிகவும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

அதே நேரத்தில், 5 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி, உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு, அந்த பெண்ணிற்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, போலீசார் மிகவும் தீவிரமான முறையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் நபரை இன்னும் சில தினங்களில் கைது செய்துவிடுவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியை, 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.