வீட்டு வேலை செய்யும் பெண்ணை, அந்த வீட்டின் பெரியவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சம்மந்தப்பட்ட பெண்ணிடம் பெரியவரின் மனைவி கெஞ்சி நிலையில், அவரின் மகன் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம், அரங்கேறி இருக்கிறது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா தெஹ்ஸிலின் மொஹல்லா கன்ஷ்யம் மண்டியில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு வீட்டில், இளம் பெண் ஒருவர் வீட்டு வேலை செய்யும் பணி செய்து வந்தார். 

அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞர், தனது வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய ஒரு பெண்ணை தேடிக் கொண்டு இருந்தார். 

அப்போது, அதே பகுதியில் வீட்டு வேலை செய்யும் இளம் பெண் பற்றி அந்த இளைஞருக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணின் வீட்டிற்குத் தேடிச் சென்ற அந்த இளைஞர், “எனது வீட்டில் வீட்டு வேலைகளுக்கு ஆள் வேண்டும் என்றும், நீங்கள் நாளை முதல் வாருங்கள்” என்றும், கூறிவிட்டு, அந்த நபர் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

அதன் படியே, அந்த இளம் பெண்ணும், அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று வீட்டு வேலைகளை மேற்கொண்டு வந்தார். 

இப்படியாக, அந்த இளம் கடந்த சில நாட்களாகக் குறிப்பிட்ட அந்த வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார். அதன் படி, கடந்த 8 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று, அந்த வீட்டின் இளைஞரும், அவரின் அம்மாவும் வேலைக்கு வெளியே சென்று விட்டனர். 

அப்போது, அந்த வீட்டில் அந்த இளைஞரின் தந்தையான பெரியவர் மட்டும் இருந்து உள்ளார். அப்போது, அந்த வீட்டில் உள்ள பணிகளைச் செய்ய, அந்த பணிப்பெண் எப்போதும் போலவே வந்திருக்கிறார். 

அந்த நேரத்தில், அந்த பணிப் பெண் மீது சபலப்பட்ட அந்த பெரியர், அந்த இளம் பெண்ணை கவனித்துக்கொண்டே இருந்து உள்ளார். அப்போது, அந்த பெண் அந்த வீட்டைக் கழுவிக்கொண்டு இருந்து உள்ளார். 

அப்போது, அந்த வீட்டிலிருந்த அந்த பெரியவர், அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணை பின் புறமாக வந்து நின்று கட்டியணைத்து உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டு அந்த பெரியவரைத் திட்டியதாகத் தெரிகிறது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த பெரியவர், அந்த பெரியவர் அந்த இளம் பெண்ணை அடித்து உதைத்து மிரட்டி உள்ளார். இதனால், பயந்து போன அந்த பெண், அந்த வீட்டின் அறையில் பயந்து போய் சத்தம் எதுவும் போடாமல் போய் இருந்துகொண்டார். 

அப்போது, அந்த பெண்ணின் பயத்தை தனக்கு ஜாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த பெரியவர், அந்த பெண்ணை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதன் பிறகு, அந்த பெண் அங்கிருந்து தப்பித்து அங்குள்ள பன்வாரியிலிருக்கும் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு போன் செய்து, கதறி அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், நேராக அந்த வீட்டில் உள்ள அந்த பெரியரின் மகனிடமும், அவரின் அம்மாவிடமும் நியாயம் கேட்டு உள்ளார். 

இதனால், பயந்து போன அந்த இளைஞனின் அம்மா, அந்த பெண்ணிடம் இது பற்றி எதுவும் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று கெஞ்சி உள்ளார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பிரச்சனை செய்ததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அந்த பெரியவர் மீது புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பெரியவரையும், மிரட்டிய அவரின் மகனையும் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.