2015-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம்.மலையாளம் சினிமாவின் காதல் படங்களுக்கு ஒரு புது விளக்கம் கொடுத்த படம்.என்னதான் நம்ம சேரனின் ஆட்டோகிராப் போல படம் இருந்தாலும் படத்தில் ஒரு உயிர் இருந்தது.மலையாளம் சினிமாவின் பக்கம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்த படம்.நிவின் பாலி,சாய் பல்லவி,அனுபமா,மடோனா என்று பல பிரபலங்களை நட்சத்திரங்களாக மாற்றிய படம்.

சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடிய மலையாள படம் என்று பல சாதனைகளை இந்த படம் படைத்திருந்தது.இந்த படத்தின் நாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆனார்.

தமிழில் தனுஷுடன் கொடி,தெலுங்கில் நிதிநின் A Aa நாகசைதன்யா வின் பிரேமம் ரீமேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தினார் அனுபமா.தொடர்ந்து இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இவர் நடிப்பில் அடுத்ததாக தள்ளிபோகாதே படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை அனுபமா.அவ்வப்போது தனது புகைப்படம்,வீடியோ என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு ஒரு குட்டி ரசிகை மோதிரம் போட்டுவிட்டதை வைத்து தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஜாலியாக ஒரு ஸ்டோரியை போட்டிருந்தார் அனுபமா.இந்த ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.

anupama parameswaran engaged shares fun story in instagram after fans gift