கடந்த 2003-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனராய் தமிழ் திரையில் கால் பதித்தவர் சுப்ரமணியம் சிவா. அதன் பிறகு பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கினார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிறந்த இயக்குனரான இவர் சீரான நடிகரும் கூட. 

தற்போது சமுத்திரக்கனி வைத்து சுப்ரமணியம் சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை. இதில் ஆத்மியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

சமீபத்தில் கர்ணன் படத்தின் டீஸரை பார்த்து விட்டு பாராட்டி ட்வீட் செய்து அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார் இயக்குனர் சுப்ரமணிய சிவா, அவரது  பதிவில் கூறியதாவது தம்பி மாரி கர்ணன் டீஸர் பார்த்தேன். வேற லெவலா இல்ல இதுக்கு பேரு வேற வைக்கனும்ப்பா.. 

உன் கர்ணன் எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான். உன் குழு மொத்தத்திற்கும் மிகப்பெரிய வெற்றிக்கான சத்தத்தின் வாழ்த்துக்கள் என்று கர்ணன் பட டீஸரை பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்து பாராட்டியிருந்தார். 

இந்நிலையில் சுப்ரமணிய சிவாவின் முகநூல் பதிவு சற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது பெயரில் போலியான கூகுள் பே அக்கௌன்ட் உருவாக்கி, அதன் மூலம் பணம் பறிக்கும் மோசடியில் சில மர்ம நபர்கள் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தனது சமூக வலைத்தள நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எடுத்துக்கூறி, அலர்ட் செய்துள்ளார் சுப்ரமணிய சிவா. 

இது போன்ற போலியான அக்கௌன்ட்டுகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் அளிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். 

Some one created fake ID in my name... Asking money ( Google Pay) . Friends be aware... Don't respond that fake...

Posted by Subramaniam Shiva on Sunday, March 28, 2021