திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் கால் பதித்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார். 

நடிகை ராஷி கண்ணாவின் திரைப்பயணத்தில் இமைக்கா நொடிகள் திரைப்படம் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

சமீப காலமாக உடல் எடையை குறைத்து வந்த ராஷி கண்ணா, தொடர்ந்து போட்டோஷூட் என அசத்தி வருகிறார். கடந்த மாதம் கோவாவில் நீச்சல் குளத்திற்கு அருகில் நீச்சல் உடையில் இவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, சகோதரனுடன் பிராங்க் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஷி. இந்த வீடியோவில் கலர் பவுடரை துண்டில் போட்டு, அதை அவரது அண்ணனிடம் தருகிறார். அவரோ அது பிராங்க் என்று அறியாமல் தொட, முகம் முழுக்க சாயமாகிறது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. 

தற்போது ராஷி கண்ணா கைவசம் அரண்மனை 3 மற்றும் துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்கள் உள்ளது. சுந்தரி.சி இயக்கிய அரண்மனை 3 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். 

அதைத தொடர்ந்து இந்தியில் சாகித் கபூர் முதல் முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.