தமிழ் சினிமாவில் இசையின் வேறொரு பரிமானத்தை காண்பித்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது தனித்தன்மை வாய்ந்த இசைக்கு ரசிகர்கள் ஏராளம். பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

அதன் பின்னர் சூதுகவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், கபாலி, காலா என தொட்டதெல்லாம் தூள் தான். சமீபத்தில் இவர் தனுஷுக்கு இசையமைத்த இரண்டு படங்களின் இசையும் வேற லெவல். ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்து இருந்தார். அதிலும் ஜமகமே தந்திரம் படத்தின் ரக்கிட்ட ரக்கிட்ட பாடலும் கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க பாடலும் மாபெரும் வெற்றியடைந்து.

இதைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் தற்போது சீயான் 60 படத்திற்கு இசையமைத்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சியான் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கிறார். மேலும் சிம்ரன் மற்றும் வாணி போஜன் நடிக்கின்றனர். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் இசைப் பணிகள் அதாவது ரெகார்டிங் நடக்கும் இடத்தில், இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் நடுவில் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் ஆஹா…. பின்றிங்களே ஜி என கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. 

சமீபத்தில் இவரது மகள் தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் யூடுயூபில் மாபெரும் ஹிட் அடித்தது. இதுவரை பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த இந்த பாடல் உலகளவில் பிரபலமடைந்து இருக்கிறது. தெருக்குரல் அறிவும் தீ உடன் சேர்ந்து பாடியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை இசையமைத்திருந்தார்.