கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.திருமணம்,உயிரே,ஓவியா,அம்மன்,இதயத்தை திருடாதே,மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.சமீபத்தில் இவர்களது சூப்பர்ஹிட் தொடரான திருமணம் தொடர் நிறைவுக்கு வந்தது.

மற்ற தொடர்கள் விறுவிறுப்பாக தங்கள் ஒளிபரப்பை தொடர்ந்து வருகின்றனர்.ரசிகர்களுக்காக சீரியல்களிலும் அவ்வப்போது சில முக்கிய ஸ்பெஷல் என்ட்ரிகளை கலர்ஸ் தமிழ் கொண்டு வந்துள்ளனர்.கலர்ஸ் தமிழ் தொடரில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று உயிரே.

மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் விரைவில் நிறைவுக்கு வரவுள்ளது.இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவல் அறிந்து இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.