செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. 

இந்நிலையில் படத்தின் டீஸர் தற்போது வெளியானது. இந்த டீஸரை கொண்டாடி வருகின்றனர் சியான் ரசிகர்கள். டீஸர் காட்சிகளில் பல கெட்டப்புகளில் வருகிறார் சியான் விக்ரம். கணித வாத்தியராக இருந்து கொண்டு அவர் செய்யும் குற்றங்களை கண்டு பிடிக்கும் இன்டர்போல் அதிகாரியாக இருக்கிறார் இர்ஃபான் பதான். ஒளிப்பதிவு, பின்னணி இசை என பட்டையை கிளப்புகிறது கோப்ரா டீஸர். அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் பதான். இவருக்கு இதுதான் முதல் படம். 

இசைப்புயல் AR ரஹ்மானின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி பிலே லிஸ்ட்டை ரூல் செய்தது. மீதம் உள்ள பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  படத்தின் டப்பிங் பணிகளும் ஒருபுறம் நடந்து வந்தது. 

கோப்ரா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கணக்கியல் ரீதியான தீர்வு உள்ளது என்று கேப்ஷன் போடப்பட்டுள்ளது. நரம்புப் புடைக்க, தலைமுடியை விரித்துப் போட்டபடி இருந்தார் சியான். நேற்று வெளியான டீஸர் அறிவிப்பு போஸ்டரிலும் வித்தியாசமான கெட்டப்பில் சியானை பார்க்க முடிந்தது. 

இந்த படத்தை முடித்து விட்டு, மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் சியான் விக்ரம் இணையவுள்ளதாக தகவல் தெரியவந்தது. அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சியான் 60 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரமும் அந்த படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார். சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.