திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய உதயநிதி ஸ்டாலின் சகிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக பேசியதால், உதயநிதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய் ஆனந்த் திவாகரன் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். உதயநிதி அவர் பேசியதை திரும்ப பெறவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெய் ஆனந்த் திவாகரன் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு உள்ளது. 


மேலும்  கண்ணியத்திற்கும், திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு உதயநிதி சாட்சி. பெண்களை பெரிதும் மதிக்கின்ற தமிழ் சமூகத்தில், இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


கருணையற்ற, அருவருக்கத்தக்க பேச்சு என்றும், அதனால் தோல்வி தொடர்வதில் ஆச்சரியமில்லை என்றும் பாஜகவின் குஷ்பு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்