பிக் பாஸ் 4ல் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முழுவதும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தினர். அளிக்கப்பட்ட டாஸ்க்கும் அந்த வகையில் தான் இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு கடினமான டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. 

அதில் போட்டியாளர்கள் ஒரு கயிற்றை பிடித்துக்கொண்டு சாய்வான தளத்தில் நிற்க வேண்டும் என கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி பந்துகளால் மற்றவர்களை அடிக்கவும் செய்யலாம். இதில் கடைசி இருவராக ஷிவானி மற்றும் ரம்யா ஆகியோர் இருக்கின்றனர். அவர்கள் கண்களில் கண்ணீருடன் வலியை பொறுத்துக்கொண்டு இந்த டாஸ்கை செய்திருப்பது இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

மதியம் வெளியான ப்ரோமோவில் சிறப்பாக ஸ்கோர் செய்தார் பாலாஜி. ஆரி மற்றும் நான்...எங்க இரண்டு பேருக்கு நடுவில் பிரச்சனை அதனால் மற்றவர்களுக்கும் எங்களுடன் பிரச்சனை என்பது போல தான் கேம் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல நானும் அவரும் தான் கெட்டவர்கள் இந்த வீட்டில்.

சில சம்பவங்களை மட்டும் எடுத்துவந்து கருத்து பதிவு செய்வது போல இருக்கிறது. Safe game நானும் விளையாடவில்லை, கண்டிப்பாக அவரும் விளையாடவில்லை. இந்த இடத்தில் safe game விளையாடாதது இந்த இடத்தில் நிறைய பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் நானும் ஒருவன்" என பாலாஜி பேசி இருக்கிறார். 

இதை ரம்யாவை குறிவைத்து தான் பாலாஜி சொல்லி இருக்கிறாரோ என்பது போல ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. அலெர்ட்டாக இருக்கும் பாலாஜியை பல பிக்பாஸ் ரசிகர்கள் பாராட்டினர். ஆரியும் பாலாஜி கூறிய வார்த்தையில் மகிழ்ச்சியாக இருந்தார். பாலாஜியின் இந்த தெளிவான மாற்றம் சோம், ரியோ, கேபி இந்த கேங்கை பாதிக்குமா என்பதை வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.