கோயிலுக்கு சென்ற 50 வயது பெண்ணை, கோயிலின் பூசாரி உள்ளிட்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு உச்சக்கட்டமான கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூன் அடுத்து இருக்கும் உகைதி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த பெண், தனது பணியை முடித்துக்கொண்டு அங்குள்ள ஆசிரமத்தை ஒட்டியுள்ள ஒரு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று உள்ளார்.

கோயிலுக்கு சென்ற அந்த 50 வயது பெண், வெகு நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பி வரவேயில்லை. வீட்டில் இருந்த கணவன், தன் மனைவியைக் காணவில்லை என்று, தனது மகளிடம் சேர்ந்து அந்த பகுதியில் தேடி உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த அந்த கணவர், அங்குள்ள காவல் நிலையத்தில் தன் மனைவியை காணவில்லை என்று, புகார் அளித்துள்ளார். அப்போது, போலீசார் அந்த புகார் மனுவை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, மறுநாள் காலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த 50 வயதான பெண்ணை தூக்கிக் கொண்டு, அவரின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்து வந்த அந்த பெண்ணின் கணவர், “என் மனைவிக்கு என்னாச்சு?” என்று பதறி உள்ளார்.

அப்போது, “இந்த பெண் கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகவும், நாங்கள் மீட்டு இங்கே கொண்டு வந்ததாகவும்” கூறி நாடகமாடி உள்ளார். 

ஆனால், அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த பெண்ணின் கணவன், பதறித்துடித்து அழுதுள்ளார். 

இதனையடுத்து, “எனது மனைவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு” அந்த 3 பேரிடமும் கூறியிருக்கிறார். ஆனால், இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த அந்த 3 பேரும், “முடியாது” என்று, மறுப்பு தெரிவித்து விட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

அப்போது, அந்த பெண்ணின் உடலில் அளவுக்கதிகமான ரத்தப் போக்கு மற்றும் உடலில் ஏற்பட்ட படுகாயங்களால் தான், அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்தார் என்பதையும், அந்த கணவர், ஒரளவிற்கு கணித்து உள்ளார். 

இதனால், இன்னும் சந்தேகம் அடைந்த அந்த கணவர், தனது மனைவியின் உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் அந்த உடலை பார்த்து பரிசோதனை செய்துவிட்டு, “இந்த பெண் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் பிறகே உயிரிழந்துள்ளதாக” கூறியுள்ளனர்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அவர், அங்கேயே சத்தம் போட்டு அழுதுள்ளார். உடனடியாக, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “கோயிலுக்கு சென்ற அந்த பெண்ணை, சம்மந்தப்பட்ட கோயிலின் பூசாரியான சத்திய நாராயணன் மற்றும் அவரது நண்பர்களான வேத்ராம், ஜஸ்பால் ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது” கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, “ஒரு நாள் முழுக்க அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வெறிப்பிடித்த கும்பல், அந்த பெண்ணின் பிறப்புறுப்பைச் சேதப்படுத்திச் சிதைத்தும், அந்த பெண்ணின் விலா எலும்புகளை உடைத்தும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக கொடூரமான முறையில் துன்புறுத்திய பிறகே கொலை செய்துள்ளனர். 
 
இதையடுத்து, சம்மந்தப்பட்ட கோயிலின் பூசாரி மற்றும் அவரின் கூட்டாளிகள் என 3 பேர் மீதும் கொலை குற்றம், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த கொடூரமான பாலியல் கொலை வழக்கில் போலீசார் தொடக்கம் முதலே மெத்தனமாகச் செயல்பட்டதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் ஊடகத்தில் 
தெரிவித்ததால், இப்போது இந்த சம்பவத்தை அந்த மாநில மகளிர் ஆணையமும் கையில் எடுத்து உள்ளது. இதனால், இந்த பிரச்சனை, அந்த மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியானாரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, சம்மந்தப்பட்ட உகைதி காவல் நிலைய ஆய்வாளர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இது போன்ற சம்பவங்களால், உத்தரப்பிரதேச மாநிலம் பாலியல் பலாத்கார சம்பவங்களின் கோட்டையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், அங்கன்வாடி பெண் பணியாளர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில், அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் என்.சி.டபிள்யூ உறுப்பினர்கள் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.