விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 3 சீசன்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர் ரசிகர்கள். கொரோனா காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.

கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீட்டிற்காக படுக்கையறை கிட்சன், டைனிங் டேபிள், லிவிங் ஏரியா என ஆடம்பரமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறுகிறது.

ரியோ ராஜ், சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது என்ட்ரியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். 

இன்று முதல் நாள் முதல் ப்ரோமோவில், வீட்டில் இருப்போர் அனைவரும் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி பிக்பாஸ் வீட்டின் முதல் நாளை துவங்கினர். முதல் நாளே தளபதி பாடலுடன் நாள் துவங்கியதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். 

XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். கொரோனா பாதிப்பு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிந்தது. 

மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த ஆண்டு மூன்றாம் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி, கவின், முகென் ஆகியோர் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி என்டர்டெயின் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.