கடந்த 1989-ம் ஆண்டு புதிய பாதை எனும் படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் கால் பதித்தவர் பார்த்திபன். தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்தவர், இன்று வரை இயக்கம் மற்றும் நடிப்பு என ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் பார்வையிலும் சிறந்த விளங்கிய இப்படம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியது. 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த கடந்த லாக்டவுனில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் வழக்கறிஞர் ரோலில் நடித்து அசத்தினார். நடிகர் பார்த்திபன் பிரபல ஹிட் படமான அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் கசிந்ததை காண முடிந்தது. இச் செய்தி குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இச்செய்தி நற்செய்தி ஆகலாம்... ஆனால் இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனைத் தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே..இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் நடிக்க பார்த்திபனை யாரும் அணுகவில்லை என்பது தெளிவானது. 

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பார்தி ரைடு என்ற வீடியோ பதிவை பகிர்ந்தார். அதில் வாத்தி ரைடு பாடலை சேர்த்து அவர் பதிவிட்டுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் ரிலீஸ் சமயத்தில் திருட்டு VCD-க்கு எதிராக அவரே களத்தில் சென்று தவறு செய்தவர்களை பிடித்து காவல் துறையிடம் நிறுத்தினார். இந்த சம்பவத்தை திரை ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பார்த்திபன் பகிர்ந்த இந்த வீடியோ இடம்பெற்றிக்கும் பாடல் மாஸ்டர் படத்தில் உள்ள பாடலாகும். XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். கொரோனா பாதிப்பு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிந்தது. 

மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். இப்படியிருக்க மாஸ்டர் படத்தின் பாடலை பார்த்திபன் பகிர்ந்தது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பார்த்திபன் கைவசம் துக்ளக் தர்பார் திரைப்படம் உள்ளது. டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். விஜய் சேதுபதியுடன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷுட்டிங் சென்ற வருடமே பூஜையுடன் துவங்கி நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.