நாகர்கோவிலில் மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் வடசேரி அடுத்து உள்ள அருகவிளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள கோணம் வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அந்த இளம் பெண்ணின் மூத்த சகோதரிக்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. 

இளம் பெண்ணின் சகோதரியின் குடும்பம் பக்கத்து ஊரில் இருக்கும் நிலையில், அக்கா கணவன் அடிக்கடி இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்து உள்ளார்.

அப்படி வந்து செல்லும் போது, மச்சினிச்சி மீது, அக்காள் கணவருக்கு சபலம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, சம்பவத்தன்று, அந்த 19 வயது இளம் பெண் உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, அங்கு வந்த அந்த இளம் பெண்ணின் அக்கா கணவன், தன் மச்சினிச்சியிடம் உடல் நலம் குறித்து விசாரிப்பது போல், அவரது நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் கை வைத்துப் பார்த்து விட்டு, திடீரென்று அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அந்த இளம் பெண் முரண்டு பிடிக்கவே, அந்த பெண்ணை மிரட்டியே அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அத்துடன், பாலியல் பலாத்காரம் செய்து முடித்த பிறகு, “இது குறித்து நீ வெளியே கூறினால், உன் அக்காவை உன் வீட்டிற்கே அடித்து விரட்டி விடுவேன்” என்று பயங்கரமாக மிரட்டி உள்ளார். அத்துடன், “உன்னையும் கொலை செய்து விடுவேன்” என்றும், அவர் மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த இளம் பெண், இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால், இதையே காரணமாக வைத்து அக்காள் கணவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை மிரட்டியே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனால், அந்த இளம் பெண் கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து, நாட்கள் ஆக ஆக அந்த இளம் பெண்ணின் கரு 6 மாத காலமாக வளர்ந்து உள்ளது. இந்த விசயம், அந்த இளம் பெண்ணின் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், தன் மகளிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, அந்த பெண் அக்காள் கணவரின் செயல்கள் குறித்துக் கூறி அழுதுள்ளார்.

மேலும், இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளம் பெண்ணின் அக்காள் கணவரை அதிரடியாகக் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.