“பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. அந்தத் தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போகும், நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்விடும். எம்.ஜி.ஆர் போல நல்ல கருத்து உள்ள படங்களில் நடித்து இருக்கிறாரா? ரிட்டயர்மண்ட் வயசுல அரசியலுக்கு வந்து இருக்கிறார் ‘’ என்று முதல்வர் எடப்பாடி கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியிருந்தார். அதற்கு "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று பதிலடி கொடுத்தார்.


இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.


விருதுநகரில் அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரைக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையில் கணக்கில் வராத 170 கோடி ரூபாய் பணமும், 105 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தொடர்பு உள்ளது என்பதால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அதை குறித்து பதிவிட்டு இருக்கிறார்.