காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி. 

அதிதி ராவ் நடிப்பில் மலையாள திரைப்படமான சுஃபியும் சுஜாதாயும் திரைப்படம் வெளியாகியது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் ஜூலை 3-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது. லாக்டவுன் சீசனில் ஓடிடி-ல் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் பாபு தயாரிப்பில் நரணிபுழா ஷானவாஸ் இயக்கிய இந்த படத்தில் ஜெயசூர்யா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். 

நானியின் 25ஆவது படமான V படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அதிதி. கடந்த மாதம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் மஹா சமுத்ரம் திரைப்படத்தில் நடிகை அதிதி ராவ் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு AK என்டர்டெயின்மென்ட் வாயிலாக வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அதிதி ரசிகர்கள். சித்தார்த் மற்றும் சர்வானந்த் நடிக்கும் இந்த படத்தை அஜய் பூபதி இயக்கவுள்ளார். 

அதிதி ராவ் நடிப்பில் துக்ளக் தர்பார் படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார். டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இதுதவிர்த்து பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் அதிதி. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். காஜல் அகர்வாலும் படத்தில் உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சிறந்த நடிகையான அதிதி, சீரான பாடகியும் கூட, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.