பாலியல் பலாத்கார செய்யும் முயற்சியில் இளம் பெண் சுய நினைவை இழந்ததால், ஓடும் காரில் இருந்து உறவினரே தூக்கி வீசிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

உன்னாவ் மாவட்டம் ஆக்ரா - லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 25 வயதான இளம் பெண் ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் காரில் சென்றுகொண்டு இருந்தார்.

அந்த கார் சிறிது தூரம் சென்றதும், திடீரென்று அந்த இளம் பெண்ணை, கூட வந்த உறவினரே திடீரென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம் பெண், அந்த நபரோடு மிக கடுமையாகப் போராடி உள்ளார். இந்த போராட்டத்தில், அந்த பெண்ணை அந்த நபர் கடுமையாகத் தாக்கி உள்ளார். 

மேலும், காரில் இருந்த சீட் பெல்ட்டைப் பயன்படுத்தி, அந்த பெண்ணின் கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார். இந்த பாலியல் பலாத்கார போராட்டத்தில், ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது சுய நினைவை முற்றிலும் இழந்துள்ளார். இதனால், அந்த பெண் உயிர் இழந்து விட்டதாக நினைத்த அந்த உறவினர், அந்த பெண்ணை ஓடும் காரில் இருந்து, அந்த பெண்ணை தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டார்.

இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கூறி, சாலையில் பெண் ஒருவர் மயக்க நிலையில் கிடப்பதாகக் கூறி உள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை பார்த்து உள்ளனர். அப்போது, அந்த இளம் பெண் சுய நினைவு இழந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், அந்த பெண்ணின் உறவினரே பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில், அந்த பெண்ணை காரில் இருந்து தூக்கி எறிந்து விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், தெலங்கானாவில் குடும்ப தகராறு காரணமாக, மாமியாரை வீதியில் வைத்து மருமகள் அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹுமாயூன் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது மாமியாரிடம் குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மாமியார் - மருமகள் இடையே வாக்குவாதம் முற்றவே, கடும் ஆத்திரமடைந்த மருமகள்,  தனது மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து ரோட்டி போட்டு, அவரை கடுமையாகத் தாக்கி உள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும், அந்த பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவாகி உள்ளது. 

இதனையடுத்து, மாமியாரை வீதியில் வைத்து மருமகள் அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியானது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாமியாரைத் தாக்கிய மருமகளைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.