விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். தொடர்ந்து சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா. ரேஷ்மாவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். ரேஷ்மாவின் போட்டோஷூட் மற்றும் ஒர்க்கவுட் வீடியோவுக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது. 

லாக்டவுன் முடிந்தவுடன் சைக்கிளிங் செய்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார் ரேஷ்மா. அவ்வப்போது சீரியல்களிலும் சில முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் ரேஷ்மா. ரேஷ்மாவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். தற்போது தனது புதிய உடற்பயிற்சி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரேஷ்மா. 

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சத்திய சோதனை. இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரேஷ்மா. கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. 

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. காவல் நிலையத்தில் பாட்டியுடன் காவல் அதிகாரிகள் மற்றும் பிரேம்ஜி இருப்பது போல் உள்ளது. போஸ்டரை பார்க்கையில் படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது என்றே கூறலாம். இந்த சத்திய சோதனை படத்தின் முதல் பார்வை போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 

இந்த படத்தில் ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரகுராம் இசையமைக்கிறார். சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்தது.