மக்களால் மிகவும் விரும்பப்பட்ட தொகுப்பாளர்கள் பட்டியலில் ரம்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. டிடி-க்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளர்களில் பெரிதும் விரும்பப்பட்டவர். சினிமாவில் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யாவுக்கு அடுத்து ஒரு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ஓகே கண்மணி, ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 

எப்போதும் போட்டோஷூட்கள், உடற்பயிற்சி வீடியோக்கள் என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார் ரம்யா. சென்ற லாக்டவுனில் ரசிகர்களுடன் லைவ்வில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார். அவ்வப்போது டிக்டாக் செய்தும் தனது
திறமையை வெளிப்படுத்தி வந்தார் ரம்யா.

இவரது டிக்டாக் விடீயோக்களும்,இன்ஸ்டாகிராம் போஸ்டுகளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.இவர் போடும் விடீயோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.உடற்பயிற்சி குறித்தும்,மேக்கப் குறித்தும் அவ்வப்போது விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருவார் ரம்யா.

கடைசியாக பேட்மிட்டன் விளையாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார் ரம்யா. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியுடன் இணைந்து ஜாக்கிங் செய்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ரம்யா. ரம்யா சொல்வதை கேட்டு அவர் வளர்க்கும் செல்லப்பிராணி வேகமாக ஓடிச்சென்று காரை தொட்டு வருவதை வீடியோவில் காண முடிகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா. XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து முடிந்தது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது.

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார்.

பல நிகழ்ச்சிகளில் மேடையில் நின்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகையாக மேடையில் நின்று பேசியது மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இனி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் ரம்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.