போராடுவதை தவிர வேற ஒன்றையும் காங்கிரஸ் செய்யாது. அவர்கள் அடுத்தவர்களின் முயற்சிகளில் தலையிடாமல் இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார். 


கர்நாடக மாநிலம் பகல்கோட்டில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அமித்ஷா ,’’ நான்கு தலைமுறையாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சி செய்த காலங்களில் இந்தியா எந்த வளர்ச்சியும் அடையவில்லை. ஏழைகளுக்கு, வீடுகள் கட்டிக்கொடுத்து இருக்கலாம். மின்சாரம், கழிப்பறை, இலவச கேஸ் சிலிண்டர்  ஆகியவை ஏற்படுத்தி கொடுத்து இருக்கலாம். ஆனால அவர்கள் அதை செய்ய விரும்பவில்லை. இந்தியாவில் இருக்கும் வறுமையை அவர்கள் நீக்க நினைக்கவில்லை. 


குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை அனைத்தும் முன்பு சீனாவில் இருந்து வாங்கினோம். ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் பொம்மை தொழிற்சாலை, கொப்பலில் அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் சீனாவிடம் இருந்து வாங்க தேவை இருக்காது. 


இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இரண்டு தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானது. விரைவில் கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம். காங்கிரஸ், போராடுவதை தவிர வேறும் ஒன்றும் செய்யமாட்டார்கள். அதனால் அவர்கள் அடுத்தவர்களின் முயற்சிகளில் தலையிடாமல் இருக்கலாம். “ என்றார்.