“விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக தமிழக வீரர் அஸ்வின் காரணமாக இருக்கலாம்” என்று, தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் 32 வயதான கோலி விராட் கோலி, கேப்டனாக இருந்து வந்தார். 

இப்படியாக, 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருப்பதால், அதனால் ஏற்பட்டு இருக்கும் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் விராட் கோலியின் நிலைப்பாடு இருப்பதாக, தொடர்ந்து தகவல்கள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, “டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக” விராட் கோலி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இது குறித்து விராட் கோலி அப்போது வெளியிட்ட அறிக்கையில், “கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்த டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும்” அவர் அறிவித்தார். 

கடந்த சில தினங்களாக இது தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், விராட் கோலியே தனது சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தனது முடிவையும் வெளிப்படையாகவே அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, “அணியில் உள்ள சீனியர் வீரரான ரோகித் சர்மா இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாகவும்” அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் தான், தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே பிரச்னை வெடித்ததாகவும், இது தொடர்பாக அஸ்வின், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாகவே, டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக நேரிட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது தொடர்பாக ஐஏஎன்எஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திகளில், “இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர், கேப்டன் விராட் கோலி தன்னை இந்திய அணியில் பாதுகாப்பற்றதாக உணர வைத்திருப்பதாக” கூறி, பிசிசிஐ செயலாளரிடம் புகார் தெரிவித்திருப்பதாக” கூறப்படுகிறது. 

“விராட் கோலி அணியில் யாரின் பேச்சையும் கேட்காமல், தவறான முடிவுகளை எடுப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்” என்றும், அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், “இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா - நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய போது, போதிய உத்வேகத்துடன் விளையாடவில்லை, என்னை கடிந்துகொண்டதாகவும்” அந்த மூத்த வீரர் விராட் கோலி குறித்து குற்றச்சாட்டை முன் வைத்தார்.

குறிப்பாக, “கோலியின் அழுத்தங்கள் அணி வீரர்களின் தேர்விலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும், பயிற்சியாளர்களுக்கும் கோலி சரியான மரியாதை கொடுக்கவில்லை என்றும். வலைப்பயிற்சியின் போது அவரின் பேட்டிங்கில் ஏதாவது மாற்றங்களைப் பயிற்சியாளர்கள் கூறினால், அவர் “என்னை குழப்ப வேண்டாம், நீங்கள் போங்கள்” என்று, கூறுவார்” என்றும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் காரணமாக, “இந்திய அணி வீரர்கள் பலருக்கும் கோலியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், ஆனால் அவர்களால் வெளிப்படையாக எதுவுமு் கூற முடியவில்லை” என்றும், அந்த மூத்த வீரர் பிசிசிஐ அதிகாரிகளிடம் குற்றச்சாட்டை அடுக்கி இருக்கிறார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் விராட் கோலி குறித்து புகார் கூறிய அந்த மூத்த வீரர், தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்துடன் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் உட்கார வைக்கப்பட்ட நிலையில், இந்த செய்தியானது தற்போது மிகவும் சீரியசாக பார்க்கப்படுகிறது.

மிக முக்கியமாக, “எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் கேப்டன் கோலி, அஸ்வினுக்கு பதிலாக யுவேந்திர சாஹலை சேர்த்துக் கொள்ளவே ஆசைப்பட்டார்” என்கிற தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால், கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.