விஜய் டிவியின் பிரபலமான  மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார் தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வெள்ளிதிரையிலும் கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஓகே கண்மணி மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார்.

குக் வித் கோமாளிக்கு வெற்றிக்கு பிறகு பெண் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அஸ்வின் குமார் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்தரன் தயாரிப்பில் இயக்குனர் A.ஹரிஹரன் எழுதி இயக்கும் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். 

ரொமான்டிக் காமெடி திரைப்படமான என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடிகர் அஸ்வின் குமாருக்கு ஜோடியாக நடிகை தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் டிவி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில் விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் இறுதிகட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் முதல் பாடலாக ஆசை என்னும் பாடல் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக என்ன சொல்ல போகிறாய் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.