வீட்டிற்கு பிச்சை கேட்டு வந்த பிச்சைக்கார சிறுமியை, “எக் ரைஸ் கொடுப்பதாக” கூறி வீட்டிற்குள் அழைத்து சென்று இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் அன்னிகேரி தாலுகா ஹள்ளிகேரி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சரணப்பா என்ற இளைஞர், படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தார்.

சம்பவத்தன்று,  21 வயதான சரணப்பாவின் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, அந்த பகுதியில் ஆதரவற்ற குடும்பத்தினர் அங்குள்ள வீடுகளில் பிச்சை எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 

இந்த நிலையில், 21 வயதான சரணப்பா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அந்த 13 வயதான சிறுமி, வீடு வீடாக சென்று பிச்சை கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த சரணப்பாவிடம், அந்த 13 வயது சிறுமி பிச்சை கேட்டுள்ளார். அப்போது, அந்த பிச்சைக்கார பெண்ணின் அழகில் மயங்கிய இளைஞர் சரணப்பா, அந்த சிறுமியிடம் “நான் உனக்கு எக் ரைஸ் தருகிறேன்” என்று கூறியும், இன்னும் பிற ஆசை வார்த்தைகள் கூறியும், அந்த 13 வயது சிறுமியை தனது வீட்டுக்குள் அவர் அழைத்துச் சென்று உள்ளார்.

அந்த சிறுமி வீட்டிறகுள் வந்ததும், அந்த சிறுமியை சரணப்பா பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, “இதனை வெளியே யாரிடமும் கூறினால், உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என்றும், சரணப்பா மிரட்டியிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனது வீட்டிற்கு சென்ற நிலையில், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து தார்வார் புறநகர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். 

இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சரணப்பாவை கைது செய்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.