ஒரு நாள் பலாத்காரம் செய்தவன் மீது பாலியல் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற சிறுமியை, போலீசாஸ்காரர் ஒருவர் ஒவ்வொரு நாளும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது பெற்றோரிடம் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் மிகவும் ஏழ்மையான கூலித் தொழிலாளிகள் என்பதால், அவர்கள் இருவரம் பகலில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் தான் வீடு திரும்புவது வழக்கம்.

அதே நேரத்தில், சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். 

இப்படியான சூழ்நிலையில், பெற்றோர் வேலைக்கு சென்றதும் சிறுமி தினமும் பள்ளிக்கூடம் சென்று வந்தார். அப்படி பள்ளி விடுமுறையாக இருந்தால், அந்த சிறுமி தனது வீட்டிலேயே இருந்துகொண்டு, வீட்டைச் சுற்றி உள்ள தோழிகளுடன் அவர் விளையாடி வருவது வாடிக்கையாக நடந்திருக்கிறது.

அப்போது, அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனால், அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அங்குள்ள கடபா காவல் நிலையத்திற்கு பாலியல் புகார் அளிக்க சென்று உள்ளார்.

அந்த நேரத்தில் அந்த கடபா காவல் நிலையத்தில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சிறுமியிடம் அந்த புகாரைப் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி செல்ல தொடங்கி உள்ளார். 

இப்படி, அவர் அடிக்க சென்ற நிலையில், அந்த சிறுமியை அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனால், சிறுமி இன்னும் அதிர்ச்சியடைந்த நிலையில், சிறுமியை சமாதானம் செய்யும் வகையில், “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று, ஆசை வார்த்தைகளைக் கூறி, அதன் பிறகு அவரை தொடர்ச்சியாக அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

இப்படியான சூழலில் தான், அந்த சிறுமி திடீரென்று கர்ப்பமடைந்து உள்ளார். இந்த விசயம், சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், இது குறித்து மகளிடம் அவர்கள் விசாரித்து உள்ளனர்.

அப்போது, “தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்தும், இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற போது போலீஸ் கான்ஸ்டபிள் அறிமுகம் ஆகி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்றும், ஆனால் என்னை திருமணம் செய்துகொள்வதாக அவர் உறுதி அளித்திருக்கிறார்” என்றும் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, போலீஸ் கான்ஸ்டபிளிடம் சென்று, எனது மகனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால், இன்னும் கடும் அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள காவல் உயர் அதிகாரிகளிடம் சம்மந்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் பாலியல் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட கான்ஸ்டபிளை காவல் நிலையத்திற்கு அழைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.