உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம், அவரது உடைகளை உருவி டாக்டர் ஒருவர் மிகவும் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவா மாநிலம் மபுசா பகுதியில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஒருவர், கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த சூழலில், திருமணம் ஆன இளம் பெண் ஒருவர் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட வலியால் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட இந்த டாக்டரின் கிளினிக்குக்கு பரிசோதனை செய்வதற்காகத் தனியாக வந்திருக்கிறார்.

அப்போது, அந்த கிளினிக்கில் பெண் உதவியாளர் இல்லாத நிலையில், பரிசோதனைக்காக வந்த பெண்ணை, அந்த டாக்டர் உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார். 

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை அங்குள்ள படுக்கை ஒன்றில் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, படுக்கச் சொல்லியிருக்கிறார். 

அதன் படியே, “டாக்டர் தன்னை பரிசோதனை செய்யப்போகிறார்” என்று எண்ணி, அந்த இளம் பெண்ணும் படுத்திருக்கிறார். 

அப்போது, அந்த பெண்ணின் உடைகளை அந்த டாக்டர் கழட்டியிருக்கிறார். அதற்கு, அந்த பெண் எதிப்பு தெரிவித்துள்ளார். இதற்கு அந்த டாக்டர், “நீங்கள் உங்கள் உடைகளை கழட்டினால்தான் என்னால் பரிசோதனை செய்ய முடியும்” என்று கூறியுள்ளார். இதனால், அந்த பெண்ணால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. 

இதனையடுத்து, அந்த பெண் அமைதியாக இருந்த நிலையில், அந்த பெண்ணின் ஆடைகளை அந்த டாக்டரே உருவி உள்ளார்.

அப்போது, அந்த பெண் அணிந்திருந்த ட்ரவுசரை அந்த டாக்டர் கழற்றி இருக்கிறார். அப்போதும் கூட, “டாக்டர் தனக்கு பரிசோதனை செய்வதற்காகத்தான் அவர் இப்படி செய்கிறார்” என்றும், அந்த இளம் பெண் மீண்டும் நினைத்திருந்த நேரத்தில், அந்த டாக்டர் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யாமல், அந்த பெண்ணின் பிறப்புறுப்பை நோக்கி அந்த டாக்டர் தனது கையை கொண்டு சென்றிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மருத்துவரின் கையை சட்டென்று தட்டிவிட்டுக்கொண்டு, அங்கிருந்து வெளியே ஓடி வந்திருக்கிறார். 

மேலும், அந்த க்ளிக்கிலிருந்து அந்த பெண் தனக்கு காருக்கு வந்ததும், தனக்கு நடந்தவற்றைத் தனது கணவருக்கு போன் செய்து கண்ணீருடன் கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு அங்கு விரைந்து வந்த அந்த பெண்ணின் கணவர், வந்த வேகத்தில் டாக்டரை அடித்துத் தாக்கி உள்ளார். 

இதனையடுத்து, அவரிடம் சண்டைபோட்டுவிட்டு அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த டாக்டர் மீது புகார் அளித்துள்ளார். 

அங்கு, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சிகிச்சைக்காக சென்ற இடத்தில் பிரபல டாக்டர் ஒருவர், இளம் பெண்ணிடன் தவறான நோக்கத்தில் நடந்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.