வாக்கிங் சென்ற கர்ப்பிணி பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் வசிக்கும் 21 வயதான இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்து உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கர்ப்பம் 6 மாதமாக வளர்ந்து உள்ளதால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அந்த பெண் தினமும் இரவில் அங்குள்ள ஒரு இடத்தில் வாக்கிங் சென்று வந்தார்.

இதனை கவனித்த அந்த பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அந்த பெண் தனியாக வாக்கிங் வருவதை நோட்டமிட்டு அந்த பெண்ணை கண்காணித்து வந்தனர்.

அத்துடன், இந்த பெண்ணை எப்படியாவது கடத்தி சென்றுச் பலாத்காரம் செய்துவிட வேண்டும் என்று, அவர்கள் திட்டமிட்டு வந்தனர்.

அதன் படி, கடந்த 25 ஆம் தேதி சனிக் கிழமை இரவு அந்த கர்ப்பிணி பெண் வழக்கம் போல தனியாக வாக்கிங் சென்று உள்ளார். 

அப்போது, அங்கு ஒரு காரில் வந்த 19 வயதான அங்கித் குமார், 21 வயதான விஷால் குமார், ஷ்யாம் குமார் ஆகிய 3 பேரும், அந்த பெண்ணை தங்களது காரில் கடத்திக்கொண்டு சென்று, அங்குள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் கடத்திச் சென்று உள்ளனர்.

அப்போது, அந்த பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, “அண்ணா, நான் மாசமா இருக்கேன், என் வயிற்றில் 6 மாத கரு வளர்ந்து வருகிறது. என்னை விட்டுறிங்க ப்ளீஸ்..” என்று, அந்த கர்ப்பிணி பெண் கெஞ்சி கேட்டு உள்ளார்.

ஆனாலும், இறக்கமே இல்லாத அந்த மிருக தனம் படைத்த கும்பல், அந்த கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணை மிரட்டிய அந்த கும்பல், அந்த வழியாக வந்த ஒரு ரயிலில் செல்லுமாறு கட்டாயப்படுத்தி ஏற்றி அனுப்பிவிட்டு, அவர்கள் ஓடி தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து, அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணி அளவில் அங்குள்ள பாட்னா ரயில் ரயில் நிலையத்தில் அந்த பெண் அழுதுகொண்டு நின்றுக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த சில பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்த நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார, அந்த பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்தவர்களில் 2 பேரை தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.