தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதி சுயாதீன இசை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படமாக வெளிவரவுள்ளது சிவகுமாரின் சபதம்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இன்டி ரெபல்ஸ் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. நடிகை மாதுரி ஜெயின் கதாநாயகியாக நடிக்க ராக்ஸ்டர் ராகுல், VJ பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்திற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சிவகுமாரின் சபதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான சிவகுமாரின் சபதம் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சிவகுமாரின் சபதம் திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிவகுமாரின் குமாரின் சபதம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பாகுபலிக்கு ஒரு கட்டப்பா” என்னும் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.