தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான #T20 தொடரில் இருந்து கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி, கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த #IPL2022 இறுதிப் போட்டியில் #GT குஜராத் அணி அசத்தல் வெற்றியை பெற்று, கோப்பையையும் கைபற்றியது.

இதனையடுத்து, “இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான #T20 போட்டியானது, வரும் ஜூன் 9 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும்” என்று, அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த போட்டியானது ஜூன் 9 ஆம் தேதியான நாளை முதல் டெல்லியில் தொடங்குகிறது.

அத்துடன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக #T20 போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் #IPL2022 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் பலருக்கும் புதிதாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு இருந்தன.

அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கியமான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக #T20 போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவருடன், துணை கேப்டனாக ரிஷாப் பண்ட் அறிவிக்கப்பட்டார்.

புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே, “நடப்பு #IPL2022 தொடரில் பெரிய பெரிய சாம்பியன் அணிகளை சாய்த்து, அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ப்ளே ஆஃப் வரை கே.எல்.ராகுல் வெற்றிகரமாக அழைத்துச் சென்றது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான #T20 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த #IPL2022 சீசனில் அற்புதாமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக இளம் வீரர்களான உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரும் இந்திய அணியில் இந்த முறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

இவர்களுடன், இளம் நட்சத்திரங்களாக இந்த #IPL2022 சீசனில் ஜொலித்த ஆவேஷ் கான், யஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இந்த முறை இந்திய அணியில் இடம் பெற்றனர்.

இவர்களைப் போலவே, ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரும் இந்திய அணியில் தற்போது இடம் பெற்று உள்ளனர்.

அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், கேஎல் ராகுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் - விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர்,  இஷான் கிஷன், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய 18 பேர் தேர்வாகி உள்ளதாக, பட்டியில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தான், நாளைய தினம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான #T20 தொடர் தொடங்க இருந்த நிலையில், கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.

இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட்,  இந்திய அணியின் கேப்டனாக தற்போது அறிவிக்கப்பட்டார். அதே போல், இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த போட்டியில், ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட் - இஷான் கிஷான் ஜோடி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான மிதாலி ராஜ், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.