உலக அளவில் இருக்கும் பலகோடி சினிமா ரசிகர்களுக்கு சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் மீது தனி கவனம் உண்டு. இந்த வகையில் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் மீது எப்போதும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம்.  கடைசியாக மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படைப்புகளாக வெளிவந்த ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் மற்றும் டாக்டர் ஸ்ட்ரெஞ்சு மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இதனை அடுத்து தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படம் வருகிற ஜூலை எட்டாம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொடர்ந்து மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் வெப்சீரிஸ்களும் முன்னணி  OTT தளங்களில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

அந்த வகையில் முன்னதாக வாண்டா விஷன், தி ஃபாலகன் அண்ட் தி வின்டர் சோல்ஜர், லோகி, ஹாக் ஐ, மூன்னைட் ஆகிய வெப்சீரிஸ்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் அடுத்ததாக மார்வெல்-ன் முதல் முஸ்லீம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாக வெளிவருகிறது மிஸ்.மார்வல். இமான் வெல்லானி மிஸ் மார்வெல் கதாப்பாத்திரத்தில் நடிக்க, மாட் லின்ட்ஸ், யஸ்மீன் ஃப்ளட்சர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் பிஷா.கே அலி இயக்கியுள்ள மிஸ் மார்வெல் வெப்சீரிஸில் பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இன்று (ஜூன் 8 தேதி) முதல் வாரம் ஒரு எபிசோடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இன்றைய முதல் எபிசோட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

மேலும் இந்த முதல் எபிசோடில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "ஓ நண்பா" பாடல் ஒரு காட்சிய இடம் பெற்றுள்ளது. அந்த காட்சியை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வைரலாகும் அந்த காட்சி இதோ …
 

 

End credits pic.twitter.com/TsOd4Wu43n