தமிழ் திரையுலக ரதிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராக திகழும் நடிகை நமீதா, நடிகர் விஜயகாந்த் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து சரத்குமாரின் ஏய், சத்யராஜின் இங்கிலீஷ்காரன் & கோவை பிரதர்ஸ் தளபதி விஜயின் அழகிய தமிழ் மகன், அஜீத் குமாரின் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நடிகை நமீதா சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார். 

நடிகை நமீதா கடந்த 2017ஆம் ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கர்பமாக இருப்பதாகவும் விரைவில் தாயாக உள்ளதாகவும் மகிழ்ச்சியோடு அறிவித்தார். 

இந்நிலையில் நமீதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்களான நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகை ராதிகா, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நமிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோலாகலமான நமீதாவின் வளைகாப்பு நிகழ்ச்சியின் வீடியோ இதோ…