இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழ்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. முன்னதாக செலிபிரிட்டி ஜோடிகளான நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் நாளை ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் அழகிய தொகுப்பாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படமாக்கப்பட்டு விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா, தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து லூசிஃபர் படத்தின் ரீமேக்காக காட்ஃபாதர் படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே நயன்தாரா நடிப்பில் த்ரில்லர் படமாக தயாராகியிருக்கும் O2 திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள O2 திரைப்படம் O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா.R.K படத்தொகுப்பு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.