“பிசிசிஐ யின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி அமித்ஷாவின் மகன் என்றும், IPL2022 இறுதிப் போட்டியில் குஜராத் வெற்றி மோசடியாக நடைபெற்றது” என்றும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

அதாவது, #IPL2022 இறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, #GT குஜராத் அணி அசத்தல் வெற்றியை பெற்று, கோப்பையையும் கைபற்றியது.

இந்த #IPL2022 சீசன் தொடங்கியதிலிருந்தே, யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

அதில் முக்கியமான ஒன்று, #GT குஜராத் டைட்டன்ஸ் தான் அறிமுகம் ஆன முதல் சீசனிலேயே அந்த அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது தான், அனைத்து தரப்பிலும் பெரும் வியப்பபை ஏற்படுத்தியது.

இந்த #IPL2022 இறுதிப் போட்டியில் #RR ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக கூறப்பட்டது என்னவென்றால், “#RR வீரர்கள் அடித்தால் பவுண்டரி அல்லது சிக்ஸர் என்றும், இல்லை என்றால் டாட் பந்து என்ற திட்டமிட்டது போல் விளையாடியதால் தான் அவர்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை என்றும், இதனால் அந்த வீரர்கள் சிங்கிள்ஸ் எடுக்க தவறினார்கள்” என்றும் கூறப்பட்டது.

அதே நேரத்தில், இந்த #IPL2022 இறுதிப் போட்டியில் #GT குஜராத் அணி வீரர்கள் யாருமே துளியும் நெருக்கடி இல்லாமல் விளையாடினர். அதன்படி, குஜராத் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்று அசத்தியது.

இந்த நிலையில் தான், இந்த “ #IPL2022 இறுதிப் போட்டியின் முடிவு மோசடி செய்து மாற்றப்பட்ட” பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, மிகவும் சர்ச்சைக்குறிய வகையில் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து சுப்பிரமணிய சுவாமி, தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள கருத்தில், “#IPL2022 கிரிக்கெட் முடிவுகள், மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலான கருத்துக்கள் இருக்கின்றன” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “மத்திய அமைச்சர் அமித்ஷா வின் மகன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருப்பதால், மத்திய அரசு இது குறித்து எந்த விசாரணையும் நடத்தாது” என்றும், அவர் தனது சொந்த கட்சியையே கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேலும், “இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு படுத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்வது மிக அவசியமாக இருக்கலாம்” என்றும், அவர் ஆலோசனை கூறி உள்ளார்.

குறிப்பாக, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக உள்ளார் என்பதும், இந்த சூழலில் தான், அவரை சுப்பிரமணிய சுவாமி மிக கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “பிசிசிஐ யின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி அமித்ஷாவின் மகன் என்றும்,  IPL2022 இறுதிப் போட்டியில் குஜராத் வெற்றி மோசடியாக நடைபெற்றது” என்றும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது, கடும் அதிர்ச்சியை கிளப்பி உள்ள நிலையில், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.