ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக நல்ல வரவேற்ப்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜின் FAN BOY சம்பவமாக வெளிவந்திருக்கும் விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது.

கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, செம்பன் வினோத், ஜாஃபர், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் 3 நிமிடம் மட்டுமே தோன்றினாலும் திரையரங்குகளை அதிர வைத்தார் சூர்யா.

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் படமாக வெளிவந்திருக்கும் விக்ரம் படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிலோமினா ராஜ் படத்தொகுப்பு செய்ய, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ள விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 

குறிப்பாக விறுவிறுப்பான திரைக்கதையும் நேர்த்தியான சண்டைக்காட்சிகளும் அட்டகாசமான பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்துள்ளன. முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கடிதத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த உலகநாயகன் தொடர்ந்து விலை உயர்ந்த LEXUS காரை பரிசோதித்து சந்தோஷ கடலில் மூழ்கடித்தார். 

இதன் தொடர்ச்சியாக தற்போது விக்ரம் திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றிய 13 பேருக்கும் 13 அப்பாச்சி பைக்குகளை பரிசளித்து மகிழ்வித்திருக்கிறார் உலகநாயகன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் முன்னிலையில் கமல்ஹாசனிடம் 13 உதவி இயக்குனர்களும் பைக்குகளை பரிசாக பெறும் புகைப்படம் இதோ…