#IPL2022 சீசனில் #MI “மும்பை இந்தியன்ஸுக்கு அடி மேல் அடி வாங்கும் நிலையில், மீண்டுவர என்ன செய்ய வேண்டும்?” என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

#IPL2022 சீசனில் நேற்று 23 வது லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில், #MI மும்பை இந்தியன்ஸ் - #PBKS பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற #MI அணியானது, இந்த சீசனில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி, பஞ்சாப் அணி சார்பில்

முதலில் பேட்டிங் செய்த #PBKS அணியின் தொடக்க வீரர்களாக தவான் - மயங்க் அகர்வால் களமிறங்கி மும்பை அணியின் பந்துவீச்சை எல்லா திசையிலும் துவம்சம் செய்தனர். இதில், அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்து அசத்தினர். 

சிறப்பாக விளையாடிய அவர்கள் இருவரும், அரைசதம் அடித்து அசத்திய நிலையில், மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், தவான் 70 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சிறப்பாக விளையாடிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்தனர்.

இதனையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய #MI மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி களமிறங்கிய நிலையில், கிஷன் ஜோடி ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர், ரோகித் சர்மாவும் சற்ற நிதானமாக விளையாடிய நிலையில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
அதன் தொடர்ச்சியாக வந்த திலக் வர்மா, டெவால்ட் பிரீவிஸ் இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில், இருவரும் வானவேடிக்கை காட்டினர். எனினும் அவர்கள் இருவரும் 49 ரன்கள் மற்றும் 36 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் சற்று அதிரடியாக ஆடிய நிலையில். 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9  விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. இதன் காரணமாக, 12  ரன்கள் வித்தியாசத்தில் #PBKS பஞ்சாப் அணி, சூப்பரான வெற்றியைப் பெற்றது.

இந்த #IPL2022 சீசனில் #MI மும்பை அணி இதுவரை விளையாடி உள்ள 5 போட்டிகளிலும், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து உள்ளது. இப்படியாக, மும்பை அணியின் தொடர் தோல்வியால், #MI அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக, மும்பை அடைந்துள்ள தொடர் தோல்விகளால் #IPL2022 சீசனில் புள்ளி பட்டியலில் தற்போது #MI மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை அணியின் தோல்வி குறித்து #MI அணியின் கேப்டன் ரோகித் பேசியபோது, “அணியில் எந்தவொரு தவறையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அனைத்தையும் சரியாக தான் செய்தோம். வெற்றி பெறும் நேரத்தில் தேவையில்லாத 2 ரன் அவுட்கள் எங்களை பின்நோக்கி இழுத்து விட்டது” என்று, குறிப்பிட்டார். 

மும்பை அணியானது, நேற்றைய போட்டியில் பவர்ப்ளேயில் மட்டுமே 5 பவுலர்களை பயன்படுத்தியிருந்த நிலையில், அந்த 5 பேரையுமே மயங்க் அகர்வால் அசால்ட்டாக சிங்கிஸ் செய்தார்.

இது மட்டுமில்லாமல், “கேட்ச் ட்ராப்கள், மிஸ் ஃபீல்ட்கள், பவுலர்கள் 16 ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கியது” என்று, நிறைய குறைகள் இருந்தது. 

இந்த போட்டியில், #MI மும்பை தோற்றது வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தான். ஆனால்,  #PBKS பஞ்சாப் கொடுத்த எக்ஸ்ட்ராஸோ வெறும் 5 ரன்கள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.