“வேகமும் இல்லை, விவேகமும் இல்லை, வலிமையும் இல்லை, என்பதால் ரசிகர்களின் விஸ்வாசத்தையும் இழந்து நிற்கும் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பீஸ்ட் Mode க்கு எப்போது போகும் என்று, சென்னை ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஏமார்ந்து துவண்டுப்போய் ரொம்பவே சோர்வடைந்துவிட்டனர்.

“இன்னைக்காவது ஜெயிச்சிறுவிங்களாண்னே.. “விட்டுறாதீங்க எப்போவ்..” என்று, #CSK ரசிகர்கள் கெஞ்சாத குறையாக பரிதாபமாகவே எதிர்பார்த்து காத்திருந்தனர்.

“நம்ம ரொம்ப வீக்குதான் என்றாலும் #IPL2022 “கிரிக்கெட் தொடரில் இன்றை போட்டியிலாவது  ஐதராபாத் அணியை வீழ்த்தி, CSK முதல் பெற்றி பெறுமா” என்று, ஒட்டுமொத்த #CSK ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தான், இந்த 17 வது லீக் போட்டியில், டாஸ் போடப்பட்டது.

இதில், டாஸ் வென்ற #SRH  சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், #CSK அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர். 

இதில், புவனேஸ்வர் குமார் ஓவரில் பவுண்டரியுடன் ரன் கணக்கை துவங்கிய #CSK அணி நிதானமாக விளையாடத் துவங்கிய நிலையில், 3 ஓவர்களில் 25 ரன்கள் குவித்த இந்த ஜோடியை, வாஷிங்டர் சுந்தர் பந்து வீசி பிரித்தார். அதுவே, #CSK வின் சோதனையாக அமைந்துப் போனத, 

உத்தப்பா 15 ரன்கள் எடுத்திருந்த போது, வாஷிங்டர் சுந்தர் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த மொயின் அலியுடன் - ருதுராஜ் நிதானமாக விளையாடியதா நினைத்த தருணத்தில், நடராஜனின் புயல் வேக பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்டம் எகிற க்ளீன் போல்டாக்கி வெளியேறினார். 

வெறும் 16 ரன்களை எடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறினார். இந்த போட்டியலாவது அவர் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் அவர் வழக்கம் போல் ஏமாற்றிவிட்டு வெளியேறினார். 

சென்னையின் 2 ஓப்பனர்களையும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் வெளியேற்றிய நிலையில், மொயின் அலி மட்டும் அதிக பட்சமாக 48 ரன்கள் எடுத்து அவுட்டானர். இதனையடுத்து, வந்த யாரும் நிலைக்கவில்லை. சொற்ப ரன்களில் வெளியேறி அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தனர். 

அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தோனியும் - ஜடேஜாவும் வழக்கம் போல் சுலோவாக தொடங்கிய நிலையில், அவர்களும் நீடிக்கவில்லை. தோனி 3 ரன்னிலும், ஜடேஜா 23 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால், 15.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து சென்னை அணி தடுமாறிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய #SRH அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் - அபிஷேக் சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடி சூப்பரான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.

அதன்படி, கேப்டன் கேன் வில்லியம்சன் 32 ரன்னில் அவுட்டானாலும், ராகுல் திரிபாதி களமிறங்கி அபிஷேக் சர்மா உடன் ஜோடி போட்டு #CSK அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இதனால், அபிஷேக் சர்மா அதிக பட்சமாக 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

என்றாலும், 17.4 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை இழந்து #SRH அணியானது 155 ரன்களை மிக எளிதாக எட்டிப் பிடித்தது.

இதனால்,  #CSK தொடர் தோல்விகளால் படு மோசமான ஃபார்மில் இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் ரொம்பவே சோர்வடைந்து உள்ளனர்.