தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்குகள் திருவிழா கோலம் கொண்டுள்ளது.ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

பல பிரபலங்களும் தங்களது பீஸ்ட் பட அனுபவங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது இந்த படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பீஸ்ட் படத்தினை பார்த்து மிகவும் ரசித்தேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.படக்குழுவினர் மற்றும் தனது நண்பர்கள் நெல்சன் மற்றும் அனிருத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.இவர் இந்த படத்தில் அராபிக்க்குத்து பாடலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .